e-அரும்புக்காய் எம் எண்ணத்திலிருந்து

 

மாதங்கள் பன்னிரண்டு கடந்தாலும்
மாதங்கள் போல் தடைகள் தடுத்தாலும்
பேதங்கள் ஏதுமில்லா பெருந்தேவி கலைவாணி
பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம்.

வீறுநடை போட்டு வீரமுடன்
நூறுதடை தாண்டி ஆரவாரமுடன்
வேறு தடைவரினும் தீரமுடன் - வேம்படிதனில்
ஏறுகின்றது அரும்பு.

வேம்படியாளின் அரும்பிய சிசுக்கள் தம்
மாண்பும் புகளும் ஓங்கிடவே
ஈராறு மாதங்கள் கடந்து வந்து
புதிதாய் மீண்டும் அரும்புகிறாள்.

விஞ்ஞான விளக்கமும் கொண்டு நிற்பாள்
அஞ்ஞான விளக்கமும் கொன்று நிற்பாள்
மெஞ்ஞான முழக்கத்தை முழங்கி நின்று
வருங்காலங்களில் மீண்டும் அரும்பி விடுவாள்.

முத்தமிழும் முத்தமிடும் கவியதனில்
நித்தமும் உன்புகழ் பாடிடவே
எத்தவம் செய்தோமோ புதல்வியர் நாம்
உத்தம e-அரும்பு வாழியவே.

 

 Teacher In-charge of e-Arumbu

          Mr. Sinnathamby Gowsigan

Web Designers

   1. Saambavi Sivanraj

   2. Pirunthini Maheswaran

   3. Majury  Thirugnanaselvan

   4. Birahavi Kugathasan

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.