ஐதரசன் குண்டு –அலேட்(அலட்டல்) ஆறுமுகம் சும்மா வாசிச்சிட்டு போகலாம் வாங்கோ

 

 

                  ஆ! வணக்கம் நான் தான் ஆறுமுகம் கொஞ்சம் science அறிவு இருக்கிறதால போற வாற ஆக்களோட உலகப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவன். அதனால எனக்கு நானே வச்ச பேர் VIP ஆறுமுகம். ஆனால் எங்கட சனத்துக்கு என்ன மாதிரி VIP (வேலை இல்லாத பெரிசு) சொல்லுறது விளங்காததால அலட்டல் ஆறுமுகம் எண்டு கூப்பிடுகினம். அதை விடுங்கோ நேற்று இப்படித்தான் வேம்படி பிள்ளை ஒண்டிட்ட அணுகுண்டைப் பற்றி கேட்டன். அது சும்மா படபடவெண்டு கதைச்சிச்சுது. அணு குண்டு உலகத்திலையே பயங்கரமான ஆயுதம். முதன் முதலா இரண்டாம் உலகப் போரில அமெரிக்காக்காரன் ஜப்பானிண்ட கிரோசிமா, நாகசாகி நகரங்களின் மேலே Bigman, Small boy எண்டு 2 குண்டைப் போட்டான். பெரிய அழிவை கொண்டு வந்தது. நான் உடன சரிசரி பிள்ளை கொஞ்சம் மூச்சு விடு எண்டுட்டு கேட்டன் உனக்கு ஐதரசன் குண்டைப் பற்றி தெரியுமோ? எண்டு அந்த பிள்ளை என்னை ஒரு மாதிரிப் பாத்திட்டு இல்லை எண்டு தலையாட்டினது. ஹி ஹி ஹி….. உங்கயும் சிலருக்கு தெரிஞ்சிருக்கும். பலருக்கு தெரிஞ்சிருக்காது. அணுகுண்டை அமெரிக்காக்காரன் கண்டுபிடிச்சு கொஞ்ச வருசத்தால அந்த இரகசியத்தை அப்படியே கறந்து ர~;யாகாரனும் அணுகுண்டை கண்டுபிடிச்சிட்டான். இப்ப பாருங்கோ பெரியாளா இருக்கிறத்துக்கு இரண்டு பேருக்கும் போட்டி வந்திட்டுது.

 

                  அதனால அணுகுண்டை விடவும் சக்தி கூடின குண்டை கண்டுபிடிக்க முயற்சி செய்தினம். அப்பிடி 1952இல் அமெரிக்க விஞ்ஞானி Edward teller முதலாவது பயங்கர ஆயுதமான ஐதரசன் குண்டை உருவாக்கினார். சும்மா குண்டில்லை இது அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கூடினதாம். முதலாவது ஐதரசன் குண்டின்ர பெயர் Ivy mine. என்ன! என்ன! மிச்சத்தையும் ஒரு 2 நிமி~ம் நிண்டு கேளுங்கோ. இந்த குண்டினுள்ள என்ன நடக்குதெண்டு தெரியுமோ?  ஐதரசன் அணுவாம் அதின்ர 4 அணுக்கருக்களை இணைச்சு He இன்ர ஒரு அணுக்கரு வருமாம். இது நடக்கேக்க பாருங்கோ அந்த மாதிரி கனக்க வெப்பம் உண்டாகும். இப்பிடியான தாக்கம் இயற்கையாகவே சூரியனிலையும் நட்சத்திரங்களிலையும் நடக்குது.இந்தக் குண்டின்ர வெளிப்பகுதி மிகவும் உறுதியான கலப்புலோகத்தால் செய்யப்பட்டு அதுக்குள்ள H வகையான டியூரியமும் ட்ரைட்டியமும் வைக்கப்படுமாம். முதல்ல அணுகுண்டை வைத்து வெடிக்கச் செய்யேக்க வெப்பநிலை லட்சக்கணக்கான டிகிரி செல்சியசிற்கு உயரும். அந்த நேரம் அதுதான் அந்த ட்யூட்ரியமும், ட்ரைட்டியமும் உருகும். இதனாலும் வெப்பநிலை கூடுமாம். நீங்க யோசிக்கிற மாதிரி கனக்க நேரம் நிகழாது. நொடிப்பொழுதின்ர பத்து லட்சத்தில் ஒரு பகுதில நடந்திடும். அப்ப பாருங்கோவன் எங்கட பொம்பிளையள் சீவி சிங்காரிச்சு வெளிக்கிட ஒரு நாள் செல்லுது. ஆன இவ்வளவு பெரிய செயற்பாடு டக்கெண்டு நடக்குது.


இப்பிடி நடக்கேக்க ர்ந அணுக்கருவோட கூடவே ஒட்டிக் கொண்டு நியூத்திரன்களும் உருவாகும். இவை சேர்ந்து யுரேனியத்தை பிளக்கச்செய்து இன்னும் அதிகமான வெப்பத்தை உண்டாக்கினம். இது தான் இந்த குண்டு பேரழிவை உண்டாக்கக் காரணம். அமெரிக்காக்காரன் இதை கண்டுபிடிச்சாலும் அதையும் எங்கிருந்தோ உருவி ர~;யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா எல்லோரும் இப்ப இதைச் செய்யினம். 1961ஆம் ஆண்டு ர~;யா சோதிச்ச அணுகுண்டின்ர வெடிப்புச்சக்தி 50 megaton TNT க்கு ஒப்பானது. இவங்கள் இப்பிடியே போட்டி போட்டு குண்டுகளைக் கண்டுபிடிச்சு உலகத்தை அழிக்கிறாங்கள். எங்கட இலங்கையில இன்னும் கைக்குண்டு கூட செய்ய முடியல. அப்பிடியெண்டா அமைதிக்கான நோபல் பரிசு எங்களுக்கெல்லோ தரவேணும்.

 

 

Source - Arumbu 2014

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.