தலைசிறந்த தத்துவஞானியும்இ கணித பேராசிரியராகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுவார் 'கணிதம் உண்மையை கூறுவது மட்டுமல்ல, அளவில்லா அழகு படைத்தது, ஒர் ஒப்புயர்வற்ற போல கணிதம் அழகு மிக்கது.. கணிதம் அழகின் உருவம்' என்கிறார் இங்கிலாந்து அறிஞர் ஹார்டி.
எண்களில் அமைந்த ஒழுங்கைப் பற்றி பலரும் ஆய்ந்திருக்கின்றனர். அவர்களில் பலரும் கணிதத்தில் பட்டம் பெற்றவரும் அல்ல. அவர்கள் கணிதத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களும் அல்ல. பொழுது போக்காக எண்களையும், அவற்றில் உள்ள சிறப்புக்களையும் கண்டறிய முற்பட்டுப்பல அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். நான் படித்து தெரிந்து கொண்ட சிலவற்றை கீழே கூறுகின்றேன்.
1+2=3
4+5+6=7+8
9+10+11+12=13+14+15
16+17+18+19+20=21+22+23+34
அடுத்த வரி என்னவென்று அனைவராலும் ஊகிக்க முடியும்.
கணிதம் கண்ட மேலும் சில சிறப்புக்கள்
சில எண்களில் மறைந்துள்ள சிறப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நான் வாசித்து அறிந்து கொண்டவை இவை. நீங்கள் இது போல ஏதேனும் காண முற்படுவீர்கள் என நம்புகிறேன்.
2025=452, 45=20+25
3025=552, 55=30+25
1233=122+332
8833=882+332
153=13+53+33
370=33+73+03
407=43+03+73
333667001=3333+6673+0013
இத்தகைய விந்தை எண்களை கண்ட கணித ஆர்வலர்கள் கணினி, கணிப்பான் காலத்திற்கு முன்னர் பென்சிலும் காகிதமும் வைத்துக்கொண்டு பல மணி நேரம் சிலவழித்து கண்டுபிடித்தார் என்றால் அவரது ஆர்வத்தை என்னவென்பது? ஆகவே கணிதம் எனும் அழகை ஆராதியுங்கள். கணிதம் இனிக்கும் ஆனால் தெவிட்டாது. கதைகளாக படிக்கும் படங்களில் மட்டும் சுவரஸ்யமில்லை கணிதத்திலும் உண்டு என நம்பினால் கணிதம் இனிக்கும்.
சி.கிருத்திகா
2017 Bio C