அறிவியல் முன்னேற்றம்

 

 

அறிவியல்
அறிவு வளர்ந்தது,
அறிவியல் வளருது,
உலகம் தாண்டிய உண்மைகள் எல்லாம்,
வெளிச்சமாக இங்கே திரையில் தெரியுது !
மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் போனான்
மனித மடைமைகளை உடைத்து காட்டினான்
நிலவில் பாட்டி கதையெல்லாம் மறுத்து
பாறை இருப்பை படம் போட்டு காட்டினான் !
நிலவின் மீது நடக்க தொடங்கினான்
கறுப்பு மச்சம் சூரியனில் கண்டான்
செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து விட்டான்
செழுமையான அறிவியல் வளர்ச்சி கண்டான் !
கண்டங்கள் கண்டான்
பூமி சூழ்ச்சியின் சூட்சுமம் கண்டான் கிரகங்களை அளந்து
தனித்தன்மையை பட்டியலிட்டான் !
உடலை துளை இட்டு நோயை ஒழித்தான்
இயற்கையாய் பிறக்கும் குழந்தையை கூட
அணுக்களால் சேர்த்து செயற்கையில் செய்தான்!
உழவனின் தேவையை உணர்ந்தவன்
மருந்து கொடுத்து மாற்றம் கொடுத்தான்
நல்ல விதிகளை தொடுத்து
விதைகளும் கொடுத்து
விவசாய உலகில் மாற்றம் கொடுத்தான் !
வீட்டிலிருக்கும் பெண்மணிகளுக்கு எல்லாம்
வேலையை குறைத்து ஓய்வும் கொடுத்தான்
சுட்டி பிள்ளைகள் வெளியே போகாத
வீட்டிற்குள்ளேயே உலகம் படைத்தான் !

வாகனம் படைத்தான்
வளர்ச்சியை கொடுத்தான்
கட்டைவண்டியின் காலத்தை மாற்றி
வேகத்தை கூட்டி விரைவை கொடுத்தான்
மண்ணில் நடந்த நம்மை இன்று வானம் ஏறி
பறக்கவும் செய்தான் !
கூரைகள் மாற்றி மாடிகள் கட்டினான்
எண்ணெய் விளக்குகளை எல்லாம் மாற்றி
மின்சாரம் படைத்து இருளை போக்கினான்
ஒளியை உருவாக்கினான் !
மனிதனையும் தாண்டி
பறவைக்கும் விலங்கிற்கும் அறிவியலாலே
மருத்துவம் பார்த்து மகத்துவம் செய்தான் !
கண்டங்கள் பாயும் தொழினுட்பம் படைத்தான்
எல்லைகள் தாண்டும் பேச்சும் கொடுத்தான்
உலகில் உள்ளம் உறவுகளை எல்லாம்
ஒற்றை திரையில் ஒன்றாய் இணைத்தான்!
வளரும் குழந்தையின் வளர்ச்சி அதை
விழியால் பார்க்கிறாள் தாயும் அதை
பிறந்த பின்னே குழந்தையும் கூட
பேசி சிரிக்குது அழகாய் போனில் !
எல்லைகள் இல்லாத அறிவியல் இதை
அளவோடு பகிர்ந்தால்
அனைவருக்கும் நன்மை
இல்லாவிட்டால் உலகம் போகும்
இருந்த இடத்திற்கே மீண்டும் திரும்பும் 

T.Kamshika

2017 Maths 13D

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.