மேரி கியூரி

 

  • மேடம் மேரி கியூரி மிகச் சிறந்த அறிவியல் அறிஞர், உலகத்தின் முதல் பெண் விஞ்ஞானி. மேடம் கியூரி 1867 நவம்பர் 7 ஆம திகதி போலாந்து நாட்டில், வார்ஸா எனும் ஊரில் பிறந்தவர். அவர் தந்தை உயர்நிலை பள்ளியில் இயற்பியல், கணக்குப்பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர். தாய் புகழ் பெற்ற பியானோ ஆசிரியை. கியூரியின் இளமைப் பெயர் மேரிஸ்க் லோடோஸ்கா என்பதாகும். திருமணத்தின் பின் மேடம் மேரி கியூரி என்று அழைக்கப்பட்டார்.

 

  • கியூரி படிப்பில் மிகவும் சிறந்து விளங்கினார். தனது 16 வது வயதில் உயர் நிலைப் பள்ளித் தேர்வில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றார். ஓய்வு நேரத்தில் கியூரி கீழ் வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பாடம் சொல்லிக் கொடுத்து தனக்கு வேண்டிய பணத்தை சம்பாதித்து கௌ;வார். பட்டப் படிப்பில் முதலாவதாகவும் தேற்றினார். மேற்படிப்புக்காக 1891 ஆம் ஆண்டு கியூரி பாரிஸ் சென்றார். அங்கு பீயஜ் மின்சாரக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த ‘பீஜர் கியூரி’ என்ற அறிவியல் அறிஞருடன் தெடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். அவர்களின் குழந்தையின் பெயர் ஜரன் கியூரி. பின் கணவன் மனைவி இருவரும் கதிரியக்கத் தாதுக்களுள் ஒன்றான பிட்ச் பிளண்ட் என்ற பொருள் மீது ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.

 

  • நிலையில் கதிர் வீச்சுத்துறையில் ஆய்வு செய்து வந்த பேராசிரியர் பெக்குரல் என்பவரிடம் 1896ல் கியூரி உதவியாளராகச் சேர்ந்தார். ‘பீட்ச் பிளெண்ட்’ எனும் தாதுப் பொருளில் உள்ள ஒரு தனிமம் ஒளித்தகடு போன்ற சில பொருட்களில் வினை புரிந்து இருளில் ஒளியை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்ற அறிவியல் முடிவுக்கு பெக்ரல் வந்திருந்தார். இம் முடிவிற்கேற்ப கியூரியும் அவரின் கணவரும் இணைந்து இந்த பிரித்தெடுப்பு முயற்சியில் இறங்கினர். ஒரு நாள் இரவு கியூரி தம்பதியினர் தம் ஆய்வுகூடத்தில் நுழைந்தவுடன் மேற்கூறிய தனிமம் வைக்கப்பட்டிருந்த சோதனைக் குழாயிலிருந்து ஊதா நிற ஒளி வீசுவதை கண்டனர். ஆனால் ஆய்வுகூடத்தில் மெழுகுவர்த்தியைக் கொழுத்தியவுடன் மேற்சொன்ன ஒளி மறைந்தது. அப் பொருளுக்கு ரேடியம் எனப் பெயரிட்டனர். மேலும் பிட்ச் பிளெண்ட் தாதுவில் உள்ள வேறொரு தனிமத்தை கண்டறிந்து அதற்கு பொலோனியம் என்று பெயர் சூட்டினர். இம் மகத்தான அறிவியல் பணியை பாராட்டி 1903இல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

  • 1906ஆம் ஆண்டில் கியூரியின் கணவர் ஒரு விபத்தில் இறந்து போனார். எனினும் அதன் பின்னும் கியூரி தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். ரேடியம் தனிமத்தை தூய்மைப்படுத்தி வெளிக்கொணர்வதில் வெற்றி கண்டார். இப்பணிக்காக 1911இல் மீண்டும் அவருக்கு நோபல் பரிசளிக்கப்பட்டது.

 

  •  மேடம் மேரி கியூரி பெண்மைக்கே உரிய தாய்மைக் குணமும் அன்புள்ளமும் கொண்டவராக விளங்கினார். முதலாம் உலகப் போரில் துயரமுற்றவர்களுக்கு பேருதவி புரிந்தார். இச் சேவையைப் பாராட்டி அமெரிக்க அரசு கியூரிக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கியது. ஒரு வேதியல் தனிமத்திற்கு கியூரியின் நினைவாக கியூரியம் என பெயர் சூட்டப்பட்டது. கதிரியக்க அலகுகளில் ஒன்று கியூரி எனவும் அழைக்கப்பட்டது.

S.Paranika

13c(2017)

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.