பிளாஸ்ரிக்கின் bio data

 


        பிளாஸ்ரிக் என்பது வேதியல் முறையில் உண்டாக்கப்பட்ட ஒரு வகைச் செயற்கைப் பொருள். அதை எந்த வடிவத்திற்கும், வண்ணத்திற்கும் மாற்றலாம். முதல் பிளாஸ்ரிக் பொருள், 1868இல் ஜான் டபிள்யு.ஹயாத்எ (John W. Hyatt) ன்னும் அமெரிக்கரால் தயாரிக்கப்பட்டது. நைட்ரோ செல்லுலோஸ் என்னும் பொருளை அழுத்தத்திற்குட்படுத்தி கரைய வைத்ததால் பிளாஸ்ரிக் கிடைத்தது.


         பல ஆண்டுகள் வரை பிளாஸ்ரிக் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டது. இரண்டு உலகப் போர்களின் விளைவால் பெருவாரியான இயற்கைப் பொருட்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் மாற்றுப் பொருட்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிளாஸ்ரிக் தயாரிக்கும் தொழில் பிற எல்லாத் தொழில்களையும் விஞ்சும் வகையில் முன்னேற்றம் கண்டது. இப்பொழுது உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் பிளாஸ்ரிக்கால் செய்யப்படுகின்றன. விண்வெளியில் ஏவப்படும் ரொக்கெட்டின் அதிவெப்ப முன்முனைக் கூம்பு, வெகுவிரைவாகப் பற்றி எரியும் மேசை வரிப்பந்து இவை இரண்டுமே பிளாஸ்ரிக்கால் ஆனவையே. ஆயினும் எல்லாப் பிளாஸ்ரிக்குகளுக்கும் பொதுவான பண்புகள் சில உள்ளன. முதலாவதாக, அவை அனைத்தும் மனிதனால் ஆக்கப்பட்டவை, இயற்கையில் கிடைப்பதில்லை. இரண்டாவதாக, அவற்றின் மூலக்கூறுகள் மிகப் பெரியவை: கரிமத்தன்மை கொண்டவை. மூன்றாவதாக, அவை ஆக்கப்படும் போது அவை அனைத்தும் ஒரு கட்டடத்தில் திரவியமாக இருக்கின்றன. அவற்றை எந்த வடிவத்திற்கும் மாற்றலாம். நான்காவதாக, பிளாஸ்ரிக்குகள் இறுதி நிலையில் திண்மமாக உள்ளன.


      பிளாஸ்ரிக் தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்கள் பெற்றோலியம், நிலக்கரி ஆகியவற்றிலிருந்நு கிடைக்கின்றன. விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கான பொருட்களை உருவாக்கும் வகையில் வௌ;வேறு பண்புகளைக் கொண்ட பிளாஸ்ரிக்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். மென்மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இக் காலத்தை பிளாஸ்டிக் யுகம் என்று சொல்லக்கூடிய அளவில் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துள்ளது. தற்போது பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.


ந.சங்கீதை

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.