கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? சில அறிவியல் உண்மைகள்

 

                 

                  அனைவரும் இதைப் படித்து விட்டு சொல்லுங்கள் கோவில் வேண்டுமா வேண்டாமா என்று!!! இதைப் படிக்க ஆரம்பிக்க முன் இது எல்லா கோவில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோவிலுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோவில்களில் எல்லாம் இது 100% உள்ளது.

                 பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடம் தான் இந்த கோவில்கள். கோயில்களில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியையும் positive energy  ஜயும் அதிகம் கொண்டிருக்கும் முக்கிய சிலை தான் மையப்பகுதியில் வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். நிறைய கோவில்களில் main கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் இந்த energy ஜ பன்மடங்காக்கி வெளிக்கொணரும். அது போக எல்லா மூலஸ்தானமும் 3 side உம் மூடி வாசல் மட்டும் தான் திறந்திருக்கும் அளவுக்கு கதவு இருக்கும். இதனால் energy waste ஆகாமல் வாசலில் உள்ளவர்களுக்கு கிடைக்கும். அது போக கோவிலின் பிரகாரத்தை நாம் வலம் வர காரணம் சக்தியின் சுற்றுப்பாதை அது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது energy நமது உடம்பில் வந்து சேருகின்றது. இந்த காந்த மற்றும் positive மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு positive comic energy.

                 மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரந்து கொண்டிருக்கும் . விக்கிரகத்திற்கு பின்னும் ஒரு விளக்கு, (இப்போது நிறைய கோவில்களில் பல்ப்பு தான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்கை ஒளி வட்டம் வருவதற்கு  அல்ல அதுவும் energy ஜ கூட்டும் ஒரு technical செயல் தான். மந்திரம் சொல்லும் போதும், மணி அடிக்கும் போதும் அங்கே செய்யப்படும் அபிN~கம் அந்த energy ஜ மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரீதமாக . energy factory தான் மூலஸ்தானம். இவ்வளவு அபிN~கம், தொடர் விளக்கு எரிதல், கற்பூர எரிப்பு போன்றவற்றை 10 நாட்களுக்கு room இல் செய்து பாருங்கள் இரண்டே
நாளில் சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோவில்களில் கற்பக்கிரகத்திற்கு எத்தனை வருடம் அபிN~கம் செய்தாலும் நாற்றம் என்ற கதைக்கு இடமே இல்லை. கடைசியில் செய்யும் சொர்ணாபிN~கம் இந்த energy ஜ மென்மேலும் கூட்டும். 

                   கற்பூரம், துளசி, குங்குமப்பூ, கராம்பு சேர்த்து செம்பில் வைத்து கொடுக்கப்படும் தீர்த்தம் ஒரு அபரீத சுவை உடையது. இதை தினமும் உட்கொள்பவர்களுக்கு இது ஒரு antibiotic என்றால் அதிகமில்லை. இன்று 1000 பற்பசை அமெரிக்காவிலிருந்து வந்தாலும் அவை கராம்பு, வேம்பு., துளசியில் தயாரிக்கும் காரணம் இது தான். இந்த தீர்த்தம் வாய், பல் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு கலவை. முன்பெல்லாம் கோவிலுக்கு தினமும் செல்பவர்களை எந்த நோயும் அண்டியதில்லை என கூறுவதற்கு இது தான் காரணம். கோயிலின் அபிN~கம் முடிந்து வஸ்திரம் சாற்றும் போது மற்றும் மகாதீபாரதனை காட்டும் போது கதவைத் திறப்பதற்கு காரணம் சுயம்புக்கு செய்த அபிN~கங்கள் energy ஆக உருவெடுத்து ஒன்று சேர்ந்து வரும் போது தான் கதவைத் திறப்பார்கள். energy முழுவதுமாக எம்மை வந்தடையும். அந்த அபிN~க நீரை எல்லோர் மீதும் தெளிக்கும் போது எம் உடம்பில் சிலிர்ப்பு ஏற்பட காரணமும் இது தான். அதன் காரணமாகவே கோயிலுக்கு ஆண்கள் மேற்சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுகின்றனர். இதன் போது energy மார்பின் கூட்டின் வழியே புகுந்து உடம்பில் சேரும் என்பது ஜதீகம். பெண்கள் இதனாலேயே தாலி அணிகின்றனர். நிறைய பெண்களுக்கு ஆண்களைப் போல இதய நோய் வராமலிருக்க காரணம் தங்க metal நல்ல positive energy ஜ வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சத்தி இருப்பதால் ஆகும். மாங்கல்யம், சாவி, புது நகைகள் போன்றவற்றை கோவில்களில் வைத்து எடுத்தால் உலோகங்கள energy ஜ அப்படியே பற்றிக்கொள்ளும். அது போக கொடி மரத்திற்கும் பரிகாரத்திற்கும் ஒரு wireless தொடர்பு உண்டென்றால் அது மிகையாகாது.கோவிலின் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிழம்பும் magnetic waves மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. கோவிலில் இடி தாக்கும் அபாயம் இல்லாதிருக்க காரணம் கோபுரத்தின் மேலிருக்கும் கலசங்களின் மின் கடத்துதிறன். கொடி மரமும் இன்னொரு இடி தாங்கி. கொடி மரம் ஆனது வெளிப் பிரகாரத்தை காக்கும் technical projector. கோவில் கதவுகள் என்றுமே மரத்தால் செய்யப்படுவது மரத்திற்கு high voltage ஜயும் நியூட்ரல் செய்யும் சிறப்பம்சம் இருப்பதாலாகும்.

                     குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர் என்பன ph மதிப்பு கொண்டவை. இவற்றைக் கொண்டு அபிN~கம் செய்வதால் கர்ப்பக்கிரகத்தில் உள்ள காற்று மண்டலம் எதிர் மின்னேற்றம் அடையும். அபிN~கத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்யும் போது காற்று மண்டலத்தில் ஒரு மின்தேக்கியை வைத்து மின்னோட்டத்தை அளந்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னோட்டம் மாறுபடுவது தெரியும். எதிர் மின்னோட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று மண்டலம் கர்ப்பகிரகத்தினுள் அமைந்துள்ளது. அந்த காற்று மண்டலத்தினுள் 'ஓம்” என்ற ஒலியுடன் அர்ச்சனை செய்யும் போது ஒலி விக்கிரகத்தில் பட்டு எதிரொலிக்கின்றது. இதனால் காற்று மண்டலத்தில் பெரும் அலையும் முத்ததிர்வும் கிடைக்கின்றது. இதன் போது ஏற்படும் காற்று வீச்சு பக்தர்கள் மேல் படும் போது அவர்களுக்கு உளவளமும் உடல் நலமும் கிடைக்கின்றது. 

                 இயந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம் வரை தான் நிலைத்திருக்கும். இந்த யந்திர தகடுகளுக்கு யாகங்கள் மூலம் உயிர் கொடுக்கப்படுகின்றது. அதனால் 13 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் செய்யப்பட்டு யந்திர தகடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆக நமது ஆலயங்களை முறையாக வழிபட்டாலே தீய எண்ணங்கள் அழிந்துவிடும். சுகமுள்ள ஆரோக்கிய வாழ்வு பெறலாம். முடிவின்றி இன்னும் எத்தனையோ விடயங்கள் உண்டு. முட்டாள் தனமாக கோவில் வேண்டாம் என்று ஒரு கூட்டம் திரிகிறது. பாவம்! மூடர்கள் அறியாமல் உழல்பவர்கள்.

சி. டர்சிகா

2017 bio 13B

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.