சூழல் மாசடைதல்

 

 


        இன்றைய உலகமானது இன்டர்நெட் யுகமாக காணப்படுகிறது. இவ்வுலகமானது தொழில்நுட்பவியலில் மிகவும் முன்னேற்றமடைந்து காணப்படுகிறது. உலகம் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. அதில் முக்கியமான பிரச்சினையாக சூழல் மாசடைதலே காணப்படுகிறது. மனிதனது எல்லாவித தேவைகளுக்கும் சூழலே இருப்பிடம் ஆகும். எனவே எமது வாழ்கையை உருவாக்கி நம்மை வாழ வைக்கும் சூழலைப் பற்றி நம்மில் பலர் சிந்திப்பதில்லை. சூழலானது நிலம், நீர், வளி, ஒலி ஆகிய வழிகளால் மாசடைகிறது. மற்றும் தற்போதைய தொழில்நுட்ப முறையின் மூலமும் சூழலானது மாசடைகிறது.


            நிலமானது விரிந்து பரந்து காணப்படுவதாகும். அந்நிலத்திலேயே மக்களாகிய நாம் வாழ்கிறோம். அந்நிலமானது இயற்கையாக எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறு இருந்தால்தான் அது நிலையானதாக இருக்கும். இயற்கைக்கு மாற்றமான ஏதாவது செயற்பாட்டினை மேற்கொண்டால் அந்நிலமானது பாரிய ஆபத்துக்குள்ளாகிவிடும். நிலமானது எவ்வாறு மாசடைகின்றது என பார்த்தோமானால், விவசாயிகளின் சொத்தாக கணிக்கப்படுவது நிலம் ஆகும். விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கையை நடத்துகின்றனர். அவர்கள் நிலத்தில் பயிரிடும் போது களைகள், கிருமிகள் என்பவைகள் இருந்தால் அவற்றை அகற்றுவதற்காக கிருமிநாசினிகள், களைகொல்லிகள் என்பவற்றை விவசாயம் மேற்கொள்ளும் நிலத்தில் வீசுகின்றனர்.


             இதன் மூலம் கிருமிகள் அழிந்து போகும். ஆனால் நிலமோ இதில் அதிகம் பாதிப்படைகிறது. நச்சுப் பொருட்களை விவசாய செடிகளுக்கு இடும் போது அது நிலத்திலே விழும். இதனால் அந்த நச்சுப் பொருளானது நிலத்தின் அமைப்பை குலைத்து விடுகிறது. இவ்வாறு நச்சுப் பொருட்களைத் தூவுவதன் மூலம் நிலமானது பயனற்றுப் போய்விடும். நிலத்திலுள்ள சிறிய நுண்ணுயீர் கூட அழிந்துவிடுகிறது. இதனால் நிலத்தின் பலம் குறைந்து விடுகிறது. இவ்வாறான சூழல் மாசுபடுதலினால் இயற்கைச் சமனிலை அற்றுப்போகிறது. இதனால் இயற்கை அனர்த்தம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. நீர் மாசடைவதைப் பற்றி பார்த்தோமானால், இரசாயன செயற்பாட்டின் போது அதில் உள்ள அமிலங்கள் நீரில் கலக்கப்படுகிரது. இதனால் நீரானது மாசடைகிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களாலும் நீர்நிலைகள் பெரிதும் பாதிப்பு அடைகிறது. இந்நீரைப் பருகுவதனால் பல தொற்றுநோய்கள் உருவாகின்றன. இவை மனித மரணங்களிற்கு வழிசமைத்து வருகின்றன. அடுத்து வளி பற்றி பார்த்தோமானால், தொழிற்பெருக்கம், போக்குவரத்துச் செயற்பாடுகளால் வளியானது மாசடைகிறது. அணு ஆய்வு உற்பத்தியின் போதும் வளி மாசடைகிறது. இவ்வாறான வளியை சுவாசிப்பதால் தொண்டை நோய், சுவாச நோய், இதய நோய் என்பன ஏற்படுகின்றன. சூழலானது பல வழிகளில் மாசடைகிறது. இதை தடுத்தால் தான் நாடு வளம் பெறும். சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான சில வழிகளாக, தொழிற்சாலைக் கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றல், நீரில் கழிவுகளை கொட்டாது பாதுகாத்தல், வாகன புகைபோக்கிகளில் ஊக்கி மாற்றிகளை பொருத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் சூழல் மாசுபடாமல் பாதுகாக்கலாம்.

G.Mythily

13D (2017) Maths

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.