பூமி யாருக்கு வேற்றுக்கிரகம்??????????

 

 

                     ஏன் வேற்றுக்கிரக வாசிகளைத் தேடுகின்றீர்கள்? ஒரு வேளை நாமே எவருக்கோ வேற்றுக்கிரகவாசிகளாக இருக்கக் கூடும்! முடிவிலா இவ் அண்டவெளியில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு.......... நாமறிந்தே எத்தனையாயிரம் கோள்கள் உண்டு. இவையெல்லாம் பூமி மாதிரித் தானே இருக்கின்றது? பூமி மாதிரி இத்தனை கோள்கள் இருக்கும் போது மனிதர் மாதிரி எவராவது இருப்பார்கள் என்றால் ஏன் நம்புகிறீர்கள் இல்லை! இவ் அளவிலா அண்டவெளி எமக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். மிகையாக இப் பால்வெளி மட்டும் போதுமல்லவா! பூமியியன் தேவைக்கு. அப்பால் உள்ள உலகம் யாருக்காக? மனித குல சந்ததியை குடியேற்ற எண்ணுகின்றீர் போலும்! அப்படியும் செய்வீர்கள் என்பதாலேயே இயற்கையாகவே உயிர்கள் தோன்றுவதும்இஅழிவதும் சமனிலை அடைந்துள்ளது.

              வேற்றுக்கிரக வாசிகளில் இரு வகையினர் உள்ளனர். ஒன்று அவர்கள் எம்மை விட அறிவு குறைந்தவர்களாக இருக்கலாம் இவ் வகையினரை நாம் தானே கண்டுபிடிக்க வேண்டும்! அவர்கள் தான் எம்மை விட அறிவு குறைந்தவர்கள் ஆயிற்றே! ஒருவேளை நான் நாளையே எம்மை விட அறிவு குறைந்த வேற்றுக்கிரகவாசிகளை சந்தித்தாலும் என்னாலான உதவிகளை செய்வேனே ஒழிய மனித குலத்திற்கு அவர்களை அறிமுகம் செய்ய மாட்டேன். நீங்களே சொல்லுங்கள் மனித குலம் என்றாவது ஒரு நாள் அவர்களது உலகை கைப்பற்ற நினைக்காதா? பூமியிலுள்ள நாடுகளுக்கே இந் நிலையெனில் அவர்கள் நிலை என்னவாகும்? இல்லையெனில் எம்மிலும் அறிவானவர்களும் இருக்கலாம். மனிதராகிய நாமே இவ்வாறு எண்ணும் போது அறிவுகூடியவர்கள் இருப்பார்கள் எனில் அவர்கள் எவ்வளவு யோசிப்பார்கள். அங்கும் ஒருவர் யோசித்ததன் விளைவு தானோ எமது பூமியை அவர்களால் அடைய முடியாது செய்திருக்கலாம். எம்மை விட அறிவானவர்களை நாம் சந்தித்தோமேயானால் மனித குலத்தின் மனங்கள் எல்லாம் தம்மை ஒரு விலங்காகவே எண்ணும். எம் வாழ்வே தலைகீழாகி விடும். எம் மனங்களில் உற்சாகம் இருக்காது, மகிழ்ச்சி இருக்காது.........! ஏதோ ஒரு முடிவற்ற ஒன்றை நோக்கித்தானே இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்? எம் இனத்திலும் வளர்ச்சியடைந்த இனம் இருப்பின் மனித மனத்தின் வேகம் குன்றாதா??? ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க எண்ணுவார்களா இல்லை பூமியைக் கரைத்து அவர்களின் உழைப்பை வேண்டுவார்களா?

               எத்தனை விஞ்ஞானிகள் தம் நாட்டிற்காக தம்மை அர்ப்பணிக்கின்றார்கள். வேற்றுக்கிரகவாசிகளைத் தேடுவதும் தம் நாட்டின் பெயரை நிலைநாட்டத் தானே! எவனொருவன் உலகம் தாண்டிய சிந்தனையுடன் வேற்றுக்கிரகவாசிகளை தேடுகின்றானோ அவனாலேயே அவர்களை காண முடியும். இது அவர்கள் எமக்கு விதித்த நியதியாக கூட இருக்கலாம்.

               இன, மத, மொழி கடந்து நாட்டிற்காக உழைக்கின்றீர்கள.; இன, மத, மொழி கடந்தவர்கள் நாட்டுப்பற்றை கடக்க முடியாதா? இன்றே எனது கையில் வேற்றுக்கிரகம் இருப்பினும் எவ்வாறு உங்களை நம்பி அவர்களை ஒப்படைப்பது? நாட்டிற்காக எத்தனை அறிஞர்கள், மேதைகள் உருவாகியுள்ளார்கள். உலகம் தாண்டிய பற்று வளர போதிப்போர் உருவாகும் போதே எம்மால் வெல்ல முடியும். இன்று எம்மால் முடியவில்லைத் தான் ஆனால் நாளை எம்மால் முடியும்...... எமது சிந்தனைகள் வெளிவரவே அரும்பு என்னும் சஞ்சிகை... சிந்திப்பது தவறில்லையே.. பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். நாட்டுப் பற்று எமக்கில்லை. பூமி, சந்திரன், சூரியன்............ அறிவுக்கெட்டிய வரை பால்வெளி எம் இருப்பிடம், எம் எண்ணம். ஒரு வேளை நாளையே வேற்றுக்கிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படினும் அவர்களும் எமது நண்பர்கள் ஆவார்கள்..............

 ஈ. மகிழ்யா

2017 13C MATHS

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.