அன்றும் இன்றும் ஒரு மர்மமாக “ஏலியன்ஸ்”

 

             தற்போது பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் “ஏலியன்ஸ்” எனும் வேற்றுக் கிரகவாசிகள் பற்றியதாகும். “ஏலியன்ஸ்” பற்றிப் பார்க்க முதல் பரிமாணம் பற்றிப் பார்த்தாக வேண்டும். புரிமாணம் எனும் போது ஐன்ஸ்டைன் எனும் மாமேதையின் Theory of relativity தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானது. அதாவது ஒளியின் வேகத்தை விட கூடிய வேகத்தில் (>3X108ms-1) எம்மால் பயணிக்கக் கூடியதாக இருந்தால் எம்மால் இ;றந்த காலத்திற்குச் செல்ல முடியும். அதாவது தற்போது 2014ம்ஆண்டு எனின் நாம் ஒளியின் வேகத்தை விட கூடிய வேகத்தில் பயணிப்போமானால் 2010, 2000, 1990….. அப்படியே இறந்த காலத்திற்குச் செல்லலாம். ஆனால்…. என்னைப் பொறுத்தவரையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது. ஆனால் எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும். அதாவது வெளியுலகத்தாருக்கு காலம் ஓடிக்கொண்டிருக்கும், ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது. ஆனால் நாம் ஒளியின் வேகத்தைத் தாண்டி (greater than 3x108) பயணிக்கும் போது நாம் இறந்த காலத்திற்குப் போவது சாத்தியம். அது நாம் ஒளியின் வேகத்தை விட எவ்வளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நாம் தற்சமயம் maximum 70>220ms-1ஐ அடைந்துள்ளோம். இதுவும் இறுதி வேகம் தான் சராசரி வேகமல்ல. இதுகூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல. சராசரி மனிதனுக்கு உகந்த வேகமாக 900kmh-1 தற்சமயம் உள்ளது என நினைக்கிறேன். ஆகவே எமது வாழ்நாளில் பின்னோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. (பேந்து ஏன் இதை எழுதிறாய் என சிலர் கேட்பார்கள் ஹிஹிஹி… நான் இந்த theory வைத்து தான் எல்லாத்தையும் சொல்ல try பண்ணப் போறன்.)
               சரி இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை. எனவே ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி ஆராய்வோம்.??? இந்தப் பிரபஞ்சத்தில் எம்மைத் தவிர வேறு உயிரினங்கள் இல்லை. பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வசிக்கிறது என நாம் நினைப்பது சின்னப்பிள்ளைத்தனமானது. இந்த மிகப் பிரமாண்டமான பிரபஞ்சம் இத்தூணூண்டு அளவுள்ள எமக்காக மட்டும் தான் படைக்கப்பட்டது என நினைப்பது எவ்வளவு முட்டாள்த்தனமானது. ஆகவே எம் பூமி தவிர வேற்று galaxy களிலும் நட்சத்திரக்குடும்பங்களிலும் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழலாம். இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை அனுப்பினார்களானால் அதுக்கு ஏன் பதில் or reaction வரல என்ற கேள்வி எழலாம். ஆனால் அங்கு தான் பெரிய சிக்கலே இருக்கிறது. வேற்றுக்கிரகவாசிகளும் எம்மைப் போல அதே 3 பரிமாணங்களைக் கொண்டிருப்பின் மட்டுமே அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்து அவர்களது தொடர்பாடல் முறை எமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே. வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய். ஏலியன்ஸ் தொடர்பான பிரபலமான சம்பவங்களை முதலில் பார்ப்போம். இது ஒரு விசித்திர சம்பவம். இரண்டு நண்பர்கள் ஆற்றங் கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கண்ணை கூசச் செய்யும் வெளிச்சத்துடன் பறக்கும் தட்டு ஒன்று வந்து இறங்கியது. அந்த அதிர்ச்சியில் ஒருவர் மயக்கமுற்று விட்டார். மற்றவர் பார்த்த போது ஒன்றுமேயில்லை. தனது நண்பர் மட்டும் மயக்கமுற்றிருப்பதைக் கண்டு உடனே அவரை வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றார். மயக்கம் தெளிந்த பின் வைத்தியர்களிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கிருந்து UFO ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் இந்நபர்களைப் பரிசோதிக்க முடிவெடுத்தார்கள். இருவரையும் ஹிப்னாட்டிஸத்துக்கு உட்படுத்திய போது ஒரு வியப்பு காத்திருந்தது. ஆம், அம்மயக்கமுள்ள நபரிடம் ஏலியன்ஸ் எந்தவிதமான சோதனைகளையும் செய்யவில்லை. மாறாக சுயநினைவுடன் இருந்த நபர் சொன்னபடி அவரை தமது ஓடத்திற்குள் அழைத்துச் சென்று சில கருவிகள் மூலமாக இவரின் உடலில் துளைகளிடாமலே ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்தார்களாம். இதிலிருந்து சில முடிவுகளை நாங்கள் எடுக்க முடியும். இங்கு மயக்கமுற்ற நபருக்கு ஏலியன்ஸ் வந்தது தெரியும். (அதைப் பார்த்த பின் தான் அவர் மயக்கமடைந்தார். ஆனால் சுயநினைவுடன் இருந்தவர்க்குஅது தெரியாது. அப்படியென்றால் ஏலியன்ஸ் ஏதோ ஒரு முறையைப் பயன்படுத்தி நினைவுகளை அழித்திருக்கிறார்கள். அவ்வாறு அழிப்பதற்கு மனிதன் சுயநினைவுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் அவர்கள் மயக்கமுற்ற நபரின் நினைவை மட்டும் அழிக்கவில்லை. ஆகவே அவர்கள் எமக்கு உட்படாத பரிமாணத்தைப் பயன்படுத்தி எம்மைத் தாண்டிய அவர்களது அறிவைப் பயன்படுத்தியோ எமது கண்க;டாக தமது கட்டுப்பாட்டிற்குள் எங்களை ஆட்படுத்துபவர்களாக இருக்கலாம். (மயக்கமுற்றமையால் அந்தநபரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை போலும்.)
             அடுத்து கேன்டன்குஃபேர் என்ற ஜேர்மானிய விண்வெளி வீரர் தான் இராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு நிகழ்ந்ததை விபரிக்கிறார். “நான் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எனது விமானத்தைத் தாண்டி ஒரு மாறுபட்ட விமானம் பறந்தது. நான் அதைப் பின் தொடர்ந்து சென்ற போது அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவாகவும் கிட்டத்தட்ட 900இல் அதன் திசையை மாற்றி மறைந்துவிட்டது.
இந்தச் சம்பவத்தில் அவர்கள் எம்மை விட எவ்வளவு கூடிய அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதாவது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பறக்கிறது என்ற முடிவிற்கு வரலாம். 900 இல் மாறிமாறி திசை திருப்புவது என்பது எமது அறிவிற்கு இன்னும் சாத்தியமாகாதது.
அமெரிக்காவில் பிரபலமாகப் பேசப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின் படிஅமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களால் தாம் விசித்திரமான உயிரினங்களை (மனிதர்களை) கண்டதாக வௌ;வேறு இடங்களில் பொலிசாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டையான உருவமும், பெரிய தலையும், நீண்ட கைகளும், விசித்திரமான நீளமான கண்களும் கொண்ட மனிதர்களை (???) தாம் கண்டதாகவும்…. அவர்கள் தம்மைக் கண்டதும் ஓடி மறைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் மயக்கமுற்று சுயநினைவின்றி இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சிலர் அவர்கள் வந்திறங்கிய இயந்திரமான பறக்கும் தட்டைக் கண்டதாகவும் கூறியுள்ளார்கள். நாம் இங்கு கவனிக்கவேண்டியது அவர்கள் கூறிய உடலமைப்புத்தான். ஏனெனில், விஞ்ஞானிகள் அடுத்த பரிணாம வளர்ச்சியில் என்னென்ன உடல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறுகிறார்களோ அதையொத்ததாகவே கூறப்பட்ட ஏலியன்ஸின் உருவ அமைப்பும் இருக்கிறது. இதிலிருந்து, அவர்கள் எம்மிலிருந்து எத்தனை மடங்கு பரிமாணம், தொழில்நுட்பம் என்பவற்றில் உயர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதை ஊகிக்க முடிகிறதல்லவா! மேலும் பறக்கும் தட்டின் சிதைந்த பகுதிகள் எனக்கூறி சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பூமியில் தற்சமயம் பாவனையில் இருக்கும் உலோகங்களுடன் ஒத்துப் போவதில்லையாம் என்றால் பாருங்களேன். ஆனால் பல ஊக்கிகளைப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் அத்தகைய உலோகங்களை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே எம்மால் அணுகமுடியாத கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத பலவற்றை அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய தொழிநுட்ப உச்சத்தில் இருப்பார்கள் என்பதை ஜுரணிக்கக்கூட முடியவில்லையல்லவா!
                  ஏலியன்ஸின் வருகையால் இதுவரைக்கும் எம்மில் இழப்பு ஏற்பட வில்லை என்பதை நாங்கள் யோசிக்க வேண்டும். இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான். முhறாக அவர்கள் எம்மை அழித்தார்களானால் இழப்பு அவர்களிலே ஏற்படலாம் அதனால் தான் அவர்கள் எம்மைக் கண்காணிப்பதிலும், எமக்குத் தெரியாமல் சில ஆராய்ச்சிகளை செய்துவிட்டுப் போவதாகவும் இருக்கலாம்.
பண்டைய கால பிரமிட்டுக்களில் கூட ஏலியன்ஸின் உருவம் வரையப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தளவு அறிவை அவர்களுக்கு கொடுத்தது யார்? ஏலியன்ஸா? அதனால் தான் பிரமிட்டுக்களில் ஏலியன்ஸின் உருவங்கள் வரையப்பட்டனவா? அப்படி எனில் ஏலியன்ஸ் அவர்களுக்கு உதவியிருந்தார்களா? எகிப்திய சாம்ராஜத்திற்கும் ஏலியன்ஸிற்கும் தொடர்பு உண்டா? அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுக்கிரகவாசி எனும் “ஏலியன்ஸ்”, பறக்கும் தட்டு என்பதெல்லம் உண்மையா??? இல்ல சும்மா கேட்டன்.

source - arumbu 2014

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.