அதிபர் வாழ்த்துரை

23 வது அரும்பு சஞ்சிகை வெளியீட்டுக்கு வாழ்த்துரை எழுதுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்காக இறைவனை பிரார்த்தித்து நன்றி கூறுகின்றேன். 'அரும்பு” சஞ்சிகை மாணவர் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் வருடாந்தம் க.பொ.த உயர்தர வகுப்பு விஞ்ஞான பிரிவு மாணவர்களினால் வெளியிடப்பட்டு வருகின்றது. மாணவர்களின் ஆற்றல், திறன், ஆளுமை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு சிறந்த களமாக அமைகின்றது. இச்சஞ்சிகையில் உள்ளடக்கப்படும் மாணவர்களது விஞ்ஞான ரீதியான ஆக்கங்கள் ஏனைய மாணவர்களிடத்தே விஞ்ஞான பாடத்தைக் கற்கும் ஆற்றலையும், ஆர்வத்தையும் உருவாக்கி வருகின்றது. அத்தோடு மாணவர்களின் ஆக்கங்கள் தமது இளைய சகோதரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றது என்றால் மிகையாகாது. இச்சஞ்சிகை உருவாக்கத்திற்கு வழிப்படுத்துகின்ற விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. குயிந்தா மணிவண்ணன், திரு. ச. அருண்நேரு மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்ற ஆசிரியர்களையும் பெருமகிழ்வுடன் பாராட்டுகின்றேன்.

ஆக்கங்களை சமர்ப்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள், சஞ்சிகையை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்த விஞ்ஞான மன்றத் தலைவி கிருத்திகா சிவசங்கரநாதன், செயளாளர் மகிழ்யா ஈஸ்வரன், மற்றும் ஏனைய மன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன். இவ் அரும்பு சஞ்சிகை பற்பல காலத்திற்கு ஏற்ற கட்டுரைகளையும், விஞ்ஞானத் துறை வளர்ச்சிக்கு பங்கேற்கும் ஆக்கங்களையும் தாங்கி நிற்கின்றது. எனவே இன்று வெளிவரும் சஞ்சிகை ஏனைய மாணவர்களின் கைகளில் தவழ்ந்து மணம் வீச வாழ்துகின்றேன்.

நூல் வடிவில் மட்டுமின்றி 7ஆவதாக e-அரும்பு வெளிவருவது பாராட்டப்பட வேண்டியது. இவ் e-அரும்பு வெளியிட அனைத்து வகையிலும் உதவிய e-அரும்பு ஆலோசகர் திரு. சின்னத்தம்பி கௌசிகன் ஆசிரியரை பெருமகிழ்வுடன் பாராட்டுவதுடன் எனது நன்றிகளையும் மனதார தெரிவித்துக்கொள்கிறேன். இவ் e-அரும்பை வெளியிட உழைத்த மாணவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ் e-அரும்பு வருடாவருடம் தொடர்ச்சியாக வெளிவர இறையருளை வேண்டி பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

திருமதி வேணுகா. சண்முகரத்தினம்
அதிபர்.

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.